17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் திருக்கோயிலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு !

ராமேஸ்வரம் திருக்கோயிலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு !

எழுதியவர்: Baker BAker May 2, 2024, 2:12 pm

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாத ஸ்வாமி திருக்கோவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்படுவதாக பெறப்பட்ட புகார் அடிப்படையில் இன்று  ராமேஸ்வரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கு.லிங்கவேல் ஆய்வு செய்தார் . ஆய்வில் முகப்பு சீட்டு இல்லாத பாக்கெட்டுகள் அப்புறபடுத்தப்பட்டது. மேலும் முறையான பேக்கிங் தேதி, காலாவதி தேதி உணவு பாதுகாப்பு உரிமம் கண்டிப்பாக அச்சிடப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்றும், உணவு தயார் செய்யும் இடத்தில் பணியாளர்கள் தலைமுடி கவசம் அணிந்து சுத்தமாகும் சுகாதாரமாகவும்  பணி செய்ய வேண்டும் என்றும் , தரமான மூலப்பொருட்களை கொண்டு பிரசாதங்கள் தயார் செய்ய வேண்டும் என்றும் , ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்களை மறுபடியும் பயன்படுத்த வேண்டாம் என்று  அறிவித்தார்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!