17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » 2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்..

2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்..

எழுதியவர்: syed abdulla May 2, 2024, 1:06 pm

2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்..

2G தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில் தீர்ப்பையே மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோருவதாகக் கூறி உச்சநீதிமன்ற பதிவாளர் மனுவை நிராகரித்தார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த காரணமும் இன்றி இந்த மனுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் கூறியுள்ளார்.

அலைக்கற்றைகளை ஏலத்திற்கு பதிலாக நிர்வாக உத்தரவு மூலம் ஒதுக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுவில் கோரியிருந்தது.

கடந்த 2012-ம் ஆண்டில் 2G வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் அலைக்கற்றைகளை ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை வழங்கிய Airtel நிறுவனத்திற்கு அலைக்கற்றைகளை மத்திய அரசு நேரடியாக விற்க முயல்வதாக எதிர்க்கட்சிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!