17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

எழுதியவர்: Abubakker Sithik May 2, 2024, 12:44 am

சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உடை மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மே தினத்தை முன்னிட்டு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், நலத்திட்ட உதவிகள், தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது.

சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தென்காசி பொறுப்பாளர் முகமது அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கவுன்சிலர்கள் நாகூர் மீரான், ரஃபீக் அன்சாரி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரபிக் பின் உசேன், சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், உதவி சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரப்பானிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் சம்சுதீன் உலவி கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தூய மிக்கேல் ஆதித் தூதர் திருத்தல பாதிரியார் போஸ்கோ குணசீலன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி ஜோசியர், கவுன்சிலர் ராசப்பா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மீரான் மருத்துவமனை மருத்துவர் அப்துல் அஜீஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தென் மண்டலத் துணைச் செயலாளர் சித்திக் மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் நல்லாசிரியர் செய்யது மசூது, வர்த்தக அணி மாவட்ட தலைவர் அஹமது மீரான், தமுமுக வாப்பா சேட், திமுக நகர பொருளாளர் சேக் பரித், அசாருதீன், மைதீன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிகமானோர் கலந்து கொண்டு நீர்மோர், நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் பெற்று பயனடைந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!