18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா கொண்டாட்டம்..

செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா கொண்டாட்டம்..

எழுதியவர்: Askar May 1, 2024, 5:03 pm

செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா கொண்டாட்டம்..

திருவண்ணாமலை அடுத்த செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் சார்பில் மே தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு தலைவர் சையத் பாரூக் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியின் முன்னதாக செயலாளர் ஜெகதீசன் அனைவரையும் வரவேற்று பேசினார் மே தின விழாவை முன்னிட்டு செங்கம் வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதி வழியாக போளூர் ரோடு மேம்பாலம் லைட் ஹவுஸ் வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் சாலை விதிகளை கடைப்பிடிப்பது,  தலைக்கவசம் அணிவது, இளம் சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதால் அதிகரித்து வரும் விபத்து குறித்து பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பின்னர் செங்கம் லட்சுமி மினி ஹாலில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அண்மையில் மறைந்த மூத்த சங்க உறுப்பினர் தாமோதரனுககு மௌன அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்திற்கு செங்கம் நகர சங்கத்தின் சார்பில் நிதி வழங்கி ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆலோசனை கூட்டத்தில்   நலச்சங்கம் முன்னேற்றம் குறித்தும், வாரியம் அமைப்பது குறித்தும்,  உறுப்பினர்கள் அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க காப்பாளர் பாலசுப்பிரமணி, சட்ட ஆலோசகர் மெகபூப் பாஷா, கௌரவத் தலைவர் ஆனந்தன், துணைத் தலைவர் சௌந்தரராஜன், இணை செயலாளர்கள் ரமேஷ் , வடிவேல் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன் ,ஷாநவாஸ், ரமேஷ், அமீர், பாஷா தயாநிதி தங்கராஜ் ஹரி , ரபீக் மற்றும் சங்க உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் பொருளாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!