18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து – 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து – 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..

எழுதியவர்: Askar May 1, 2024, 11:54 am

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து – 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..

ஆவியூர் – கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள தனியார் கல்குவாரியில் வெடி விபத்து.

பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது வெடிமருந்துகள் வெடித்து சிதறின.

வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலி, 8 பேர் காயம்; 2 வாகனங்கள் முற்றிலும் சேதம்.

மேலும் மனித உடல்கள் காட்டுப் பகுதியில் ஆங்காங்கே சிதறி கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் வெடி மருந்துகள் இருப்பதாகவும் இதனால் அந்த பகுதிக்கு தீயணைப்பு துறையினர் போலீசார் அருகே செல்ல முடியாத நிலை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த வெடி விபத்தின் போது இப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!