17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில்தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு..

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில்தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு..

எழுதியவர்: Askar April 30, 2024, 11:57 pm

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!