ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பாக மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தோசத்தை கண்டித்து டி என் ஆர் ஓ ஏ சங்க பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் வட்ட கிளை தலைவர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலாளரின் தொடர்ச்சியாக ஊழியர்கள் விரோதப் போக்கை கண்டித்தும், மாவட்ட ஊராட்சி அலுவலக பணியாளர் துர்கா மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்ததை திரும்ப பெற வலியுறுத்தியும், மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூரில் மாவட்ட ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
எழுதியவர்: Baker BAker April 30, 2024, 10:25 pm




You must be logged in to post a comment.