17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி ! விவசாயிகள் பங்கேற்பு !!

பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி ! விவசாயிகள் பங்கேற்பு !!

எழுதியவர்: Baker BAker April 30, 2024, 9:15 pm

இராமநாதபுரம் மாவட்டம்  திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  பனையடியேந்தல் கிராமத்தில்   ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம் என்ற தலைப்பில் பாரம்பரியமான விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயம் செய்வது எப்படி என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை  இறுதி ஆண்டு படிக்கும்  மாணவி  மூ.சூரிய லட்சுமி தலைமையில் நடைபெற்றது. மேலும் ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம் முறையினை எவ்வாறு மானாவாரி நிலங்களில் (1 எக்டர்) அமைப்பது பற்றியும் , ஆடு மாடு வளர்ப்பு பற்றியும் , நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றியும் தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பண்ணைக் குட்டை 10 சென்ட் பயிர் தொழிலோடு கால்நடை வளர்ப்பு என்பது நம் முன்னோர் வாழ்க்கை முறையில் கடைபிடிககப்பட்டு வந்தது பண்ணை வருமானத்தைப் பெருக்க பயிர் தொழிலோடு இணைந்து உபத் தொழில்களை முறையாகத் தேர்வு செய்தல் அவசியம் என்றும் , இன்றைய கால கட்டத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்குவதே சிறந்த அணுகு முறை என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்  அடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!