17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் புகார்மனு அளிக்க கஞ்சாவுடன் வந்த பாஜக மாநில நிர்வாகி அதிரடி கைது..

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் புகார்மனு அளிக்க கஞ்சாவுடன் வந்த பாஜக மாநில நிர்வாகி அதிரடி கைது..

எழுதியவர்: Askar April 29, 2024, 7:35 pm

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் புகார்மனு அளிக்க கஞ்சாவுடன் வந்த பாஜக மாநில நிர்வாகி அதிரடி கைது..

முதல்வரின் பாதுகாப்பு விதிமீறல் ,கஞ்சா உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவனியாபுரம் போலீஸார் பாஜக நிர்வாகியை கைது செய்தனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விடுமுறை பயணமாக கொடைக்கானல் செல்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை இன்று காலை மதுரை வந்தடைந்தார்.

மதுரை விமான நிலையத்தில் முதல்வரிடம் மனு அளிப்பதற்காக வந்த பாஜக நிர்வாகி சங்கர பாண்டியன் முதல்வரின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஐ பி சி (IPC) விதிகளின் படி மூன்று பிரிவுகளிலும் கஞ்சா வழக்கு ஒன்றும் மொத்தம் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகி சங்கர பாண்டியனை அவனியாபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!