18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்ற இளைஞர்களால் பரபரப்பு; காவல் துறையினர் விசாரணை..

மதுரையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்ற இளைஞர்களால் பரபரப்பு; காவல் துறையினர் விசாரணை..

எழுதியவர்: Askar April 28, 2024, 9:38 pm

மதுரையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்ற இளைஞர்களால் பரபரப்பு; காவல் துறையினர் விசாரணை..

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தை திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் சமயங்களில் ஜல்லிக்கட்டு போட்டியினை முறையாக காவல்துறையினரிடம் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் நினைவாக ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று மதுரை மாடக்குளம் பகுதியில் நடத்தப்படும் என வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டதை தொடர்ந்து மாடக்குளம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே திறந்த வெளியில் சிலர் அனுமதி இன்றி தற்காலிக வாடிவாசல் அமைத்து பத்திற்கும் மேற்பட்ட காளைகளை வரவழைத்து ஜல்லிக்கட்டு போட்டியை என்பதை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை கண்டதும்  இளைஞர்கள் ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அவிழ்த்து விடக்காத்திருந்த காளைகள் மற்றும் ஒரு சில இளைஞர்களை பிடித்து எஸ் எஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து குடியிருப்பு பகுதி அருகே அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயற்சி செய்த இளைஞர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!