மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது சின்னக்குறவகுடி கிராமம்.இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுமார் 60க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு தலைமை ஆசிரியராக வடுகபட்டியைச் சேர்ந்த செல்வ சிரோன்மணி பணியாற்றி வருகின்றார்.இவர் கடந்த 24 வருடங்களாக இப்பள்ளியில் பணியாற்றிய நிலையில் இன்று பணி நிறைவு பெறுகின்றார்.இவருக்கான பிரிவு உபச்சார விழா சின்னக்குறவகுடி பள்ளியில் நடைபெற்றது.இந்நிலையில் இப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கிராமமக்கள் ஒன்றிணைந்து தங்கள் குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை செலுத்திய தலைமை ஆசிரியருக்கு பித்தளை அண்டா குண்டா மற்றும் சேலைகளை சீர் வரிசையாக கொடுத்து அசத்தினர்.மேலும் தலைமை ஆசிரியை செல்வசிரோன்மணிக்கு பரிவட்டம் கட்டி மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து தலைமை ஆசிரியருடன் கிராமத்தையே ஊர்வலமாக வலம் வந்தனர்.பின்னர் பள்ளியில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில் தலைமைசிரியருக்கு பல்வேறு பரிசுப்பொருட்களை மாணவ மாணவிகள் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.
தலைமையாசிரியருக்கு பரிவட்டம் கட்டி மேளதாளங்கள் முழங்க கிராமத்தையே வலம் வந்த கிராம மக்கள்.
எழுதியவர்: mohan April 27, 2024, 11:36 am




You must be logged in to post a comment.