18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50 சதவீதம் வாக்குகள் பதிவு..

பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50 சதவீதம் வாக்குகள் பதிவு..

எழுதியவர்: Askar April 26, 2024, 5:36 pm

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 3 மணி நிலவரப்படி அசாம் 60.3%, பீகார் 44.2%, சத்தீஸ்கர் 63.9%, ஜம்மு-காஷ்மீர் 57.8%, கர்நாடகா 50.9%, கேரளா 51.6%, மத்தியபிரதேசம் 46.5%, மகாராஷ்டிரா 43%, மணிப்பூர் 68.5%, ராஜஸ்தான் 50.3%, திரிபுரா – 68.9%, உ.பி.யில் 44.1%, மேற்கு வங்காளம் 60.6% வாக்குகள் பதிவாகி உள்ளது.அதன்படி, இன்று நடைபெற்று வரும் 88 தொகுதிகளில் இதுவரை 50.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!