18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி: போலீசார் விசாரணை..

நடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி: போலீசார் விசாரணை..

எழுதியவர்: Askar April 26, 2024, 5:13 pm

நடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலி: போலீசார் விசாரணை..


மதுரை பைபாஸ் ரோடு காளவாசல் பிபி சாவடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மதுரை மேலக்கல் பகுதியைச் சேர்ந்த குப்பாயி வயது 70 என்பவர் மீது விக்கிரமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து  மோதியது. இதில் முன்சக்கரம் மற்றும் பின் சக்கரம் இரண்டும் மூதாட்டி மீது ஏறி இறங்கியது. ஆகையால் சம்பவ இடத்திலேயே குப்பாயி பலியானார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் குப்பாயி உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.அரசு பேருந்து ஓட்டி வந்த ரமேஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடந்து சென்ற மூதாட்டி அரசு பேருந்து மோதி இறந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!