17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகம் முழுவதும் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்! சென்னையில் இன்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது…

தமிழகம் முழுவதும் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்! சென்னையில் இன்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது…

எழுதியவர்: Askar April 23, 2024, 11:18 pm

தமிழகம் முழுவதும் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 100 டிகிரி வெப்பமும், கோவையில் 102 டிகிரி வெப்பமும் பதிவானதுவேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-தஞ்சாவூர் 102.2, திருப்பத்தூர் 106.88, திருச்சி 104.18, திருத்தணி 103.64, வேலூர் 106.7, பாளையங்கோட்டை 102.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!