17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை அருங்காட்சியகத்தில் கோடை கால பயிற்சி முகாம்..

நெல்லை அருங்காட்சியகத்தில் கோடை கால பயிற்சி முகாம்..

எழுதியவர்: Abubakker Sithik April 22, 2024, 3:37 pm

நெல்லை அருங்காட்சியகத்தில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் துவக்கம்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை கால சிறப்பு பயிற்சி முகாம் துவங்கியது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை காலத்தினை பள்ளி மாணவ மாணவிகள் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடக்க திட்டமிடப்பட்டிருந்தன. அப்பயிற்சி முகாமினை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் கவிஞர் சுப்பையா முன்னிலை வகித்தார்.

இன்றைய தினம் ஓவிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியினை கலை ஆசிரியை ரஹ்மத் நிஷா பேகம் நடத்தினார். ஓவியப் பயிற்சியில், காய்கறிகள் கொண்டு அழகிய ஓவியங்கள் தயாரிக்கும் பயிற்சியும், வண்ணம் தீட்டுதல் பயிற்சியும் இன்று நடத்தப்பட்டன. இப்பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நாளை உலக புத்தக தினத்தை முன்னிட்டு பஞ்ச தந்திர கதை சொல்லி நிகழ்வும், கதை சொல்லும் போட்டியும் நடைபெற உள்ளது என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!