18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாராளுமன்ற தேர்தல்: 102 தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீத வாக்குகள் பதிவு..

பாராளுமன்ற தேர்தல்: 102 தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீத வாக்குகள் பதிவு..

எழுதியவர்: Askar April 19, 2024, 4:57 pm

மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.உத்தரகாண்டில் 45.62 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 47.44 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 53.40 சதவீதமும், மகாராஷ்டிராவில் 44.12 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!