ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு தொடர்ந்து இன்று கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் நேரடியாக கிராமங்களுக்கு சென்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இருதரப்பின் பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதால் போராட்டங்களை கைவிட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர் . இதில் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் உடன் இருந்தனர்.
போராட்டத்தை கைவிட்ட ஆணைகுடி கிராம மக்கள் ! தேர்தலில் வாக்களிப்பதாக உத்தரவாதம் !!
எழுதியவர்: Baker BAker April 16, 2024, 10:54 pm




You must be logged in to post a comment.