17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » நிர்வாகம் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் புதிய உதயம் !

கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் புதிய உதயம் !

எழுதியவர்: Baker BAker April 15, 2024, 8:17 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடற்கரை பீச் பார்க் லைட்ஹவுஸ் அருகில் கீழக்கரை இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே இ உமர் கலந்து கொண்டு பேசுகையில் . இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் கீழக்கரையில் இதன் மூலம் குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதாக தெரிகிறது. கீழக்கரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர் இந்த ஊரில் இதுபோன்ற இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.இந்த வேலையில் இது போன்ற இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியது வரவேற்கத்தக்கது மேலும் இச்சங்கத்தின் மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாக குழுவின் மூலம் இணைந்து போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாதம் ஒருமுறை விழிப்புணர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் முறையாக இதை வழிநடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!