18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கை ! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் வெளியீடு !!

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கை ! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் வெளியீடு !!

எழுதியவர்: Baker BAker April 13, 2024, 1:05 am

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே நவாஸ்கனி தேர்தல் அறிக்கை 2024 வெளியிட்டார். வேட்பாளர் கே நவாஸ்கனி செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கடந்த ஐந்தாண்டு காலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் நம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சமரசம் இல்லாமல் குரல் கொடுத்திருக்கிறேன். தேசிய சராசரியை விடவும், மாநில சராசரியை விடவும் பன்மடங்கு அதிகமான பங்களிப்பை நாடாளுமன்றத்தில் சிறப்பாக வழங்கி இருக்கிறேன். பாஜக அரசின் வஞ்சகப் பார்வையால் தமிழ்நாடு மட்டுமல்ல இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்து தொடர்ந்து உழைத்த நான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் போது ஆளுங்கட்சியாக அமர்ந்து நம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் பொழுது நம் தொகுதியில் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்த தேர்தல் அறிக்கையை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். மேலும் தேர்தல் அறிக்கை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!