மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 5வது வார்டைச் சார்ந்தது இருளப்ப தேவர் தெரு. இத்தெருவில் சாக்கடை வசதி முறையாக பராமரிப்பு இன்று கிடப்பதால் அப்பகுதியில் தொற்றுநோய் ஏற்படுவதாகவும் உடனடியாக அதனை சரி செய்ய கொடுக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர் சந்திரனிடம் நகராட்சி அதிகாரிகளிடமும் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை .இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று கீழப்புதூரில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.சம்பவமறிந்த போலிசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உசிலம்பட்டியில் சாக்கடை வசதி கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
எழுதியவர்: mohan April 10, 2024, 11:40 am




You must be logged in to post a comment.