17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

எழுதியவர்: Abubakker Sithik April 10, 2024, 11:17 am

தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், தென்காசி பாறையடி தெரு, காயிதே மில்லத் நகரில் வைத்து, நோன்பு பெருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிஸான் அணி மாநிலச் செயலாளர் தென்காசி முகம்மது அலி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்பதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், மின்சார வாரிய செயற்பொறியாளர் ரபீக் பின் உசைன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் வரவேற்றார். மீரான் மருத்துவமனை மருத்துவர் அப்துல் அஜீஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அசாருதீன் நன்றி கூறினார். துபாய் ஷேக், கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நூறு நபர்களுக்கு அரிசி, கைலி, சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!