17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..

முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..

எழுதியவர்: Abubakker Sithik April 10, 2024, 10:20 am

முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..

கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டியில் காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். திமுக கிளைச் செயலாளர் நவாஸ்கான் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு, திமுக கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும், கடையம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமான மகேஷ் மாயவன், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் கட்டி அப்துல் காதர், திமுக மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மற்றும் முஸ்லிம் லீக் தொண்டர்கள் முதலியார்பட்டி, காந்திநகர் இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதில் திமுக சிறுபான்மை அணி ஒன்றிய செயலாளர் செய்யது அலி, வார்டு பொறுப்பாளர் மாரியப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தொழிலாளர் அணி துணைத் தலைவர் காதர் மைதீன், முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் ரிபாய், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!