ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் சிறுவர்கள் அதிகமாக இரு சக்கர வாகனங்களில் செல்வதாகவும் , அதிக சத்தம் கொண்ட வாகனத்தை இயக்குவதாகவும் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்: அதனைத் தொடர்ந்து கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு அனைத்து இருசக்கர வாகனங்களையும் சோதனை செய்யப்பட்டதில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களையும் முறையாக ஆவணங்கள் இல்லாத வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர். மேலும் இளைஞர்கள் அதிகமானோர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருவதாகவும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் அரசு விதித்த விதிமுறைகள் படி நம்பர் பிளேட் பயன்படுத்தாமல் செயல்பட்டு வருவதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார் . மேலும் சட்ட விரோதமான செயலில் ஈடுபடுபவர்கள் தான் இது போன்ற தவறுகளை செய்வார்கள் என்றும் பெற்றோர்கள் இன்றைய இளைஞர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இரவு 12 மணிக்கு மேல் இளைஞர்கள் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். கீழக்கரை காவல் நிலைய காவலர்கள் செயல்பாடுகளை கண்டு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
கீழக்கரையில் உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ! இரவு முழுவதும் ரோந்து பணியில் கீழக்கரை காவலர்கள் !!
எழுதியவர்: Baker BAker April 7, 2024, 7:52 pm




You must be logged in to post a comment.