17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ட்ரான்ஸ்ஃபார்மரில் திடீரென பற்றி எரிந்து குபு குபுவென கொழுந்து விட்டு எரிந்த தீ! மதுரையில் பரபரப்பு..

ட்ரான்ஸ்ஃபார்மரில் திடீரென பற்றி எரிந்து குபு குபுவென கொழுந்து விட்டு எரிந்த தீ! மதுரையில் பரபரப்பு..

எழுதியவர்: Askar April 5, 2024, 11:27 pm

ட்ரான்ஸ்ஃபார்மரில் திடீரென பற்றி எரிந்து குபு குபுவென கொழுந்து விட்டு எரிந்த தீ! மதுரையில் பரபரப்பு..

மதுரையில் பிரதான சாலையான சிம்மக்கல் அருகே செல்லத்தம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள ட்ரான்ஸ்ஃபார்மரில்  திடீரென  தீப்பற்றி எறிய தொடங்கியது.

மேலும் கீழே  ஆயிலும் கொட்டி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ட்ரான்ஸ்ஃபார்மர் திடீரென வெடித்து மளமளவென தீப்பற்றி எறிய தொடங்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிக அளவு லாரி ஷெட்டுகள் உள்ள பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து திலகர் திடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!