18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில், வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள்..

தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில், வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள்..

எழுதியவர்: Askar April 5, 2024, 5:11 am

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அவற்றில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

  • 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவான இடங்கள் வருமாறு:-
  • ஈரோடு – 106.16 டிகிரி செல்சியஸ்
  • சேலம் – 105.2 டிகிரி செல்சியஸ்
  • கரூர் – 105.8 டிகிரி செல்சியஸ்
  • வேலூர் – 103.1 டிகிரி செல்சியஸ்
  • தர்மபுரி – 104.2 டிகிரி செல்சியஸ்
  • திருச்சி – 104.3 டிகிரி செல்சியஸ்
  • கோவை – 102.5 டிகிரி செல்சியஸ்
  • மதுரை – 102.56 டிகிரி செல்சியஸ்
  • திருத்தணி – 103.6 டிகிரி செல்சியஸ்
  • நாமக்கல் – 103.1டிகிரி செல்சியஸ்
  • திருப்பத்தூர் – 104.3 டிகிரி செல்சியஸ்
  • தஞ்சாவூர் – 101 டிகிரி செல்சியஸ்
  • சென்னை மீனம்பாக்கம்-101.76 டிகிரி செல்சியஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!