17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11 ரயில்கள் சேவையில் மாற்றம்:தெற்கு ரயில்வே அறிவிப்பு..

பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11 ரயில்கள் சேவையில் மாற்றம்:தெற்கு ரயில்வே அறிவிப்பு..

எழுதியவர்: Askar April 1, 2024, 10:54 pm

சென்னையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நாளை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரலுக்கு வரவேண்டிய கொச்சுவேலி, கோரக்பூர் விரைவு ரயில்களும் பெரம்பூரில் நிறுத்தப்படும்.

மேலும், நாளை மறுநாள் சென்னை சென்ட்ரல் வரவேண்டிய ஏற்காடு விரைவு ரயில் ஆவடி வரை இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் -பெங்களூரு இடையே இயக்கப்படும் அதிகவேக ரயில் ஆவடி வரை இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் சென்னை சென்ட்ரல் வர வேண்டிய ஆலப்புழா விரைவு ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!