மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விட்டுள்ளார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறி வரும் நிலையில், அவர்களால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது என்று மீண்டும் உறுதியளித்துள்ளார். மேலும், சி.ஏ.ஏ.-வுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொது மக்களை மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவராகி விடுவீர்கள், இதனால் அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால்: 200 தாண்டுங்கு பார்க்கலாம்..
எழுதியவர்: Askar March 31, 2024, 11:19 pm




You must be logged in to post a comment.