17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாட்டு வெடி குண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..

நாட்டு வெடி குண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..

எழுதியவர்: Abubakker Sithik March 31, 2024, 11:13 pm

சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது; மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்களை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது காவல் துறையினரை கண்டதும் தப்பித்து ஓட முயன்ற சுரேஷ் என்பவரை பிடித்து அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது.

இது தொடர்பாக மேற்படி நபரிடம் விசாரணை செய்ததில், சுரண்டையில் நாகராஜ் என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி நாட்டு 8 வெடிகுண்டுகளாக தயார் செய்து, அதில் இரண்டு குண்டுகளை மனோ சங்கர் என்பவரிடமும், ஒரு குண்டு கார்த்திக் என்பவருக்கும் கொடுத்து வைத்திருப்பதாகவும், மூன்று குண்டுகளை 30.03.24 அன்று வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நாகராஜா என்பவரின் மகன் சுரேஷ் (34), கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கார்த்திக் (25) சுரண்டை பாண்டியன் என்பவரின் மகன் மனோ சங்கர் (19) மற்றும் சுரண்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவர் மகன் நாகராஜா(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!