18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உனக்கும் எனக்கும் தான் பொருத்தம், மன்சூர் மைன்ட் வாய்ஸ்!- ஓபிஎஸ் மற்றும் மன்சூரலிகானுக்கு ஒரே சின்னம்‌..

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம், மன்சூர் மைன்ட் வாய்ஸ்!- ஓபிஎஸ் மற்றும் மன்சூரலிகானுக்கு ஒரே சின்னம்‌..

எழுதியவர்: Askar March 30, 2024, 8:03 pm

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதே ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இருவரும் வெவ்வேறு தொகுதியில் போட்டியிடுவதால் ஒரே சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!