17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

எழுதியவர்: Askar March 30, 2024, 7:49 pm

சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவை-சென்னை இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண் 06050) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவையில் இருந்து வரும் மார்ச் 31ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல் சென்னையிலிருந்து சிறப்பு ரயில் (எண் 06049) ஏப்.1ம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். கோவையிலிருந்து சென்னைக்கு வரும் பெரம்பூரில் நின்று செல்லும். சென்னையிலிருந்து புறப்படும் பெரம்பூரில் நிற்காது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!