18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக 2 கிராம மக்கள் அறிவிப்பு! அலறி அடித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை..

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக 2 கிராம மக்கள் அறிவிப்பு! அலறி அடித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை..

எழுதியவர்: Askar March 30, 2024, 7:23 pm

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக 2 கிராம மக்கள் அறிவிப்பு! அலறி அடித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை..

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஊராட்சிக் குட்பட்ட கோடாங்கிபட்டியில் அடிப் படை வசதிகள், தார் சாலை வசதிகள் செய்து தரப்படாததால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.

கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன், காவல் ஆய்வாளர் குருநாதன், கிராம நிர்வாக அலுவலர் பாண்டி, தனிப்பிரிவு சார்பு-ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதேபோல், அடிப்படை வசதிகள் செய்து தராததால், தேர்தலை புறக்கணிப்போம் என அறிவித்த கோவிலாங்குளம் ஊராட்சிக்குட் பட்ட நெறிஞ்சிப்பட்டி கிராம பொது மக்களிடம், கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கோட்டைராஜ், மணி மேகலை (கிராம ஊராட்சிகள்), சார்பு-ஆய்வாளர் நாகநாதன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த 2 கிராமங்களிலும் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!