தஞ்சாவூர் வின்னர் மல்டி மியுரல் அகாடமி தற்காப்பு கலை பன்னாட்டு பயிற்சி பள்ளி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் கொண்டு அறக்கட்டளை, அருள்மொழி கலை இளையோர் மன்றம் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் சிலம்பம் அரங்கேற்றம் மற்றும் மாராயப் பட்டைகள் வழங்கும் விழா தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, தஞ்சாவூர் சிலம்ப சங்க செயலாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம், ஸ்டார் லயன் கல்வி நிறுவன முதல்வர் மில்டன் ராஜ், ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் மாராயப் பட்டைகளை வழங்கினர், முன்னதாக இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாள்வீச்சு, ஒற்றைவாள், இரட்டைவாள், சுருள்வீச்சு, மான்கொம்பு,சக்கர பானம், ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, அலங்கார பாடம், குத்துவரிசை ஆகிய தற்காப்பு கலைகளை செய்து காட்டி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர், இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் சங்கீதா செய்திருந்தார்
தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் சிலம்ப கலைகளை வெளிக்காட்டி விழா !
எழுதியவர்: Baker BAker March 30, 2024, 5:08 pm




You must be logged in to post a comment.