18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு..

தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு..

எழுதியவர்: Abubakker Sithik March 30, 2024, 2:24 pm

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், வாக்காளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் மேலதாளங்கள் முழங்க காவல் துறையினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வது வழக்கம். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் பகுதியில் நடந்தது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P..சுரேஷ்குமார் நேரடி கண்காணிப்பில், 29.03.2024 அன்று வாசுதேவநல்லூர் பகுதிகளில் RPF வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இதில் காவலர்கள் மற்றும் RPF வீரர்கள் முக்கிய வீதிகளில் மேலதாளங்கள் முழங்கிட ஊர்வலமாக சென்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!