17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் தொகுதியில் ஓ . பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் !!

ராமநாதபுரம் தொகுதியில் ஓ . பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் !!

எழுதியவர்: Baker BAker March 26, 2024, 7:56 pm

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே நாளில் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார் . இந்த நிலையில் இன்று( 26.03.2024 )தெற்கு காட்டூரை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், திருமங்கலத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்ற 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அது மட்டுமின்றி நேற்று வேட்புமனு தாக்கல் செய்த உசிலம்பட்டியை அடுத்த மேக்கிலார் பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மேலும் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த 3 ஓ பன்னீர்செல்வத்தை சேர்த்து இதுவரை 5 பேர் ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!