ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் பாரதி நகர் பகுதியில் இருந்து தாரை தப்பட்டை முழங்க கட்சியின் தொண்டர்களோடு ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் உடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கண். இளங்கோ மாவட்ட செயலாளர் நாகூர் கனி, தொகுதி பொறுப்பாளர் வெண்குளம் ராஜு உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் !
எழுதியவர்: Baker BAker March 26, 2024, 7:27 pm




You must be logged in to post a comment.