18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்..

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்..

எழுதியவர்: Abubakker Sithik March 26, 2024, 1:21 pm

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்..

தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.கே.கமல் கிஷோரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மேள தாளங்கள் முழங்க கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். அதனை தொடர்ந்து தனது வேட்பு மனுவை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனுதாக்கல் செய்த இந்தியா கூட்டணி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணி கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!