18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை..

திருமங்கலத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை..

எழுதியவர்: Abubakker Sithik March 26, 2024, 9:56 am

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில், 50 வயது மிக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – கொலையா? போலீஸ் விசாரணை..

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், உசிலம்பட்டி அருகே காளப்பன்பட்டியை சேர்ந்தவர் சுகுமாரன். இவர் திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில், டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது காரை திருமங்கலம் பஸ் டிப்போவின் வெளிப்பகுதியில் பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், காருக்குள் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், அருகில் இருந்தவர்கள் பார்த்த போது காருக்குள் உடல் அழுகிய நிலையில் ஒருவரின் சடலம் இருந்தது.

உடனடியாக, திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் அழுகிய நிலையில் இருந்த, 50 வயது மிக்க இறந்தவர் உடலை மீட்டு, இறந்தவர் யார்? என்பது குறித்தும், காருக்குள் எப்படி வந்தார் என்பது குறித்தும், கொலை செய்து காரில் போட்டுச் சென்றனரா? என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!