17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் செய்தியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு ! மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி சந்தித்து வாழ்த்து !!

ராமநாதபுரம் செய்தியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு ! மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி சந்தித்து வாழ்த்து !!

எழுதியவர்: Baker BAker March 24, 2024, 12:03 am

ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று (23.03.2024 ) நடைபெற்றது . இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியாளர் கே.தனபாலன், செயலாளராக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் கே கே. குமார், பொருளாளராக சத்தியம் டிவி செய்தியாளர் பி. மகேஸ்வரன், கௌரவ தலைவராக தினமலர் நாளிதழ் உதவி ஆசிரியர் பழனிச்சாமி, துணைத் தலைவராக வசந்த் தொலைக்காட்சி செய்தியாளர் ஜி இளங்கோவன் ,இணைச்செயலாளராக தினபூமி நாளிதழ் செய்தியாளர் ஆர் . ரமேஷ், பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர்ஏ . பிரபு ராவ், நிர்வாக குழு உறுப்பினர்களாக ராஜ் டிவி பாகற் செழியன், நமது அம்மா பாலமுருகன்,நியூஸ் 18 டிவி செய்தியாளர் வீரக்குமரன் , தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் சோனை முத்தன், மாலை முரசு டிவி செய்தியாளர் கண்ணன் பாபு ஆகியோர்களை ஏகமனதாக பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோரே நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றனர். தேர்வாகியுள்ள சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!