ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி நிறுவனர் வி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மதுரை யாதவா கல்லூரி முதல்வர் (ஓய்வு) கண்ணன், மதுரை ஆயிர வைஸ்யர் கல்லூரி முதல்வர் சிவாஜி கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் 2019-22, ஆண்டில் பயின்று பல்வேறு பாடப் பிரிவுகளில் அழகப்பா பல்கலை அளவில் பயின்ற சிறப்பிடம் பிடித்த 8 மாணவியர் & 2020-23 ஆண்டில் பயின்று பல்வேறு பாடப்பிரிவுகளில் பல்கலை அளவில் சிறப்பிடம் பிடித்த 7 மாணவியர் உள்பட 423 மாணவியருக்கு அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி பட்டம் வழங்கினார். துணை சேர்மன் பார்த்தசாரதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் முத்துக்குமார், தேவகி, பத்மாவதி, செயலர் சகுந்தலா, முதல்வர் காஞ்சனா உள்பட பலர் பங்கேற்றனர். இதில் கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா !
எழுதியவர்: Baker BAker March 23, 2024, 4:25 pm




You must be logged in to post a comment.