18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டாக்டர் ராணிக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு..

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டாக்டர் ராணிக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு..

எழுதியவர்: Abubakker Sithik March 23, 2024, 11:03 am

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு நகர திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு..

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமாருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில், நகர கழக செயலாளர் ஆர்.சாதிர் முன்னிலையில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு நகர திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மேலதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேபோன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருத்துவர் ராணிக்கு கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் மா.செல்லத்துரை முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுரண்டை முத்துக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், திமுக முன்னோடிகள், உறுப்பினர்கள், கூட்டணி கட்சி அனைத்து பொறுப்பாளர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

தென்காசி நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல் சுப்பையா, அவைத்தலைவர் கிட்டு, துணை செயலாளர்கள் ராம்துரை, பால்ராஜ், பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பிரதிநிதிகள் மைதீன் பிச்சை, பாலசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயலட்சுமி மகேஸ்வரி, கல்பனா, சுமதி, கார்த்திகா, மாவட்ட பொறியாளர் அணித்தலைவர் தங்கப்பாண்டியன், சாரதி, முருகன், மாணவரணி மைதீன், சன்ராஜா, சண்முகநாதன், ரகுமான், சாதாத், பாலாமணி, பாலசுப்பிரமணியன், கோபால் ஆகியோருடன்,

ராம், கங்காதரன், சாகுல் ஹமீது, ராமநாதன், அருணாச்சலம், பரமசிவன், முகமது ரபி, பழக்கடை குமார், செய்யது ஆபில், நாகூர் மீரான், சபரி சங்கர், பேக் அமீர், இசக்கி ரவி, கருதபாண்டி, முருகன், வேம்பு, சாகுல் ஹமீத், சேக்குலாசா, செய்யது பட்டாணி, சம்சுதீன், கூட்டணி கட்சி சார்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அபூபக்கர், விடுதலைச் சிறுத்தை கட்சி ஹக்கீம், சித்திக் சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐயப்பன், காங்கிரஸ் மாடசாமி ஜோசியர், மதிமுக கார்த்திக் வெங்கடேஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!