18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..

எழுதியவர்: Askar March 23, 2024, 9:44 am

தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சியான தி.மு.க. முழு வீச்சில் தயாராகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது.ஏணி சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் ஐ.யூ.எம்.எல். கட்சியின் கோரிக்கையை ஏற்று ஏணி சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஐ.யூ.எம்.எல். கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி களம் காண்கிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!