18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு!-தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு!-தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

எழுதியவர்: Askar March 22, 2024, 7:22 pm

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இம்முறை எந்தக் கூட்டணியிலும் பங்கேற்காமல் தனித்துப் போட்டியிடுகிறது அக்கட்சி.

எனினும் எதிர்பார்த்த சின்னம் கிடைக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தங்களுக்கு ஒதுக்கக் கோரிய கரும்பு விவசாயி சின்னம் வேறொரு மாநிலக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவை அவசரமானதாகக் கருதி விசாரிக்கவும் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி அனுப்பிய சின்னங்ளை ஆராய்ந்து அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!