18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஷ்டமான முடிவு; இஷ்டப்பட்டு எடுத்தேன்-மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன்..

கஷ்டமான முடிவு; இஷ்டப்பட்டு எடுத்தேன்-மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன்..

எழுதியவர்: Askar March 20, 2024, 12:35 pm

கஷ்டமான முடிவு; இஷ்டப்பட்டு எடுத்தேன்-மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன்..

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த மருத்துவர் தமிழிசை செளந்தர்ராஜன், மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அப்போது பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன், இந்நாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை தனது பதவியை நேற்று முன் தினம் (மார்ச் 18) ராஜினாமா செய்தார். தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு இன்று வந்த அவர், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அப்போது பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன், இந்நாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழிசை, அதே உறுப்பினர் எண்ணைப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும்போது, ’’பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கஷ்டமான முடிவை எடுத்தாலும் இஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன். கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!