17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணி சார்ஜிங் பிளக்கிற்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 6 1/2 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணி சார்ஜிங் பிளக்கிற்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 6 1/2 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

எழுதியவர்: mohan March 16, 2024, 11:47 am

துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த இரண்டு சார்ஜிங் பிளக்கிற்குள் 6 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினர் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டணம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் விஜய் ஆனந்த் (வயது 40) என்பவர் என தெரிய வந்தது.துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த தங்கத்தை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!