17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாஜக பிரமுகர் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பாஜக பிரமுகர் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik March 15, 2024, 1:00 pm

பாஜக பிரமுகர் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்புவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் அறிவுறுத்தலின் படி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் சரஸ்வதி, சுசீலா, கற்பக செல்வி, வைத்தீஸ்வரி, ஷாலிமேரி, நிஷா, தர்ம செல்வி, மாரியம்மாள், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் சோபனா, மாரிச் செல்வி, ராஜேஸ்வரி சமுத்திரக்கனி, முத்துலதா, சபர் நிஷா, விமலா, சாந்தி, பூங்கோதை, ராமலட்சுமி பூபதி, பத்மா, கல்பனா மகா தேவி உள்பட பலர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் மகளிர் உரிமை தொகையை உதாசீனம் செய்யும் விதமாக பேசிய பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!