18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கர்நாடக ஆளுநர் தவா ஆர்சந் கெலாட் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை.

கர்நாடக ஆளுநர் தவா ஆர்சந் கெலாட் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை.

எழுதியவர்: mohan March 14, 2024, 7:26 pm

கர்நாடக ஆளுநர் தவா அர்சந் கெலாட் ஆன்மிக பயணமாக மதுரைக்கு வருகை தந்தார். மாலை 4 மணியளவில் அழகர் கோவிலில் தரிசனம் முடித்து ஆறு மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்து பின்னர் 7 மணி அளவில் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.கர்நாடகா மாநிலம் ஆளுநர் வருகை ஒட்டி கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பட்டர்கள் ரமேஷ் , சொக்கு சுப்பிரமணியம் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.கர்நாடக ஆளுநர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகையொட்டி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு போலீஸார் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.ஆளுநர் வருகை யொட்டி பக்தர்கள் அரை மணி நேரம் சாமி தரிசனம் செய்யாமல் காத்திருந்தனர்.பின்னர் ஆளுநர் தவா அர்சந் கெலாட் சாமி தரிசனம் முடிந்து காரில் விருந்தினர் மாளிகை புறப்பட்டு சென்றார்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!