17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிலவேம்பு கசாயம் ஒரு புறம்-குப்பை மறுபுறம்..பருத்திகாரத் தெருவின் குப்பை மேடு..நோய் பரவும் அபாயம்..

நிலவேம்பு கசாயம் ஒரு புறம்-குப்பை மறுபுறம்..பருத்திகாரத் தெருவின் குப்பை மேடு..நோய் பரவும் அபாயம்..

எழுதியவர்: ஆசிரியர் February 2, 2017, 12:34 pm

கீழக்கரை பருத்திக்காரத் தெரு ரைஸ் மில் பின்புறம் நகராட்சி நிர்வாகத்தினரால் கண்டு கொள்ளப்படாத குப்பை மேடாக காணப்படுகிறது. பல நாள்களாக துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படாததால் சகிக்க முடியாத துர் நாற்றத்துடன் சுகாதாரக் கேடு நிலவி வருகிறது. தற்போது கீழக்கரை நகர் எங்கிலும் மர்ம காய்ச்சல், டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் சூழலில், பொதுமக்க்கள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர்

நகராட்சி நிர்வாகமும்,சுகாதாரத் துறையினரும் இது போன்ற இடங்களில் துப்புரவு பணிகளை முடுக்கி விடாமல் வெறுமெனே நிலவேம்பு கசாயமும், விழிப்புணர்வும் வழங்குவதில் பயனொன்றும் இல்லை. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு நகராட்சி சார்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்வார்களா..? இவர்கள் செய்வார்களா..??

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!