17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் 16 வது ஆண்டு விழா; பரிசுகள் வழங்கல்..

வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் 16 வது ஆண்டு விழா; பரிசுகள் வழங்கல்..

எழுதியவர்: Abubakker Sithik March 13, 2024, 10:25 pm

வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் 16 வது ஆண்டு விழா; பரிசுகள் வழங்கல்..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் 16ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு பணி நிறைவு பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். செங்கோட்டை புதூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஹக்கீமா பானு, வெங்கடாம்பட்டி டிரஸ்ட் நிறுவனர் பூ. திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் அப்துல் மஜீத் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாத்திமா ஆண்டறிக்கை வாசித்தார்

அதனை தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தெய்வம் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் பழைய குற்றாலம் மவுண்ட் கில்டன் பள்ளி நிறுவனரும் தாளாளருமான ஆர்.ஜேவி.பெல், குற்றாலம் ஐஓபி வங்கி கிளை மேலாளர் தீபக் அபிராம், வல்லம் முஸ்லீம் ஜமாஅத் தலைவர் அகமது மீரான், வழக்கறிஞர் அபு அண்ணாவி, செங்கோட்டை அரசு பொது நூலக நல்நூலகர் ராமசாமி, எஸ்எம்எஸ்எஸ். அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் ஆகியோருடன் மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் சித்திகா பர்வீன் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!