17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

எழுதியவர்: Abubakker Sithik March 13, 2024, 3:11 pm

முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உறுப்பினர்கள் முகமது யூசுப், தங்கையா, இப்ராஹிம், காதர், பக்கீர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர் காதர் மைதீன் வரவேற்றார். துணை தலைவர் பழக்கடை சுலைமான், திமுக மாவட்ட பிரதிநிதி முகம்மது யாகூப், வாழ்த்திப் பேசினர். வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் நவாஸ்கான், தண்ணீர் பந்தலை தொடங்கி வைத்தார். ருக்சானா முகைதீன் பிச்சை நன்றி கூறினார். தொடக்க நிகழ்ச்சியில், அருகில் உள்ள மக்களுக்கு தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!