17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இனி எங்கேயும் அலைய வேண்டாம்! வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமத்தை (LLR) இனி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்..

இனி எங்கேயும் அலைய வேண்டாம்! வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமத்தை (LLR) இனி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்..

எழுதியவர்: Askar March 12, 2024, 11:06 pm

இனி எங்கேயும் அலைய வேண்டாம்! வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமத்தை (LLR) இனி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்..

இதுகுறித்து போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் Browsing Centre களையும் பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது.

இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படியும், போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும் இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000 க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை நாளை முதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது.

இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு அருகாமையிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் ) பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60-ஐச் செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR -ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் (Driving License, Permit, உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!